Share via:
தெலுங்கானா மாநிலத்தில் பள்ளியில் மதிய உணவு நேரத்தில் பூரி சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா புறநகர பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் வீரேன் ஜெயின் என்ற 6ம் வகுப்பு மாணவன் பயின்று வந்தான். வழக்கம் போல் மதிய உணவு நேரத்தில் வீரேன் ஜெயின் தான் வீட்டில் இருந்து கொண்டு வந்த பூரியை சாப்பிட ஆரம்பித்தான். அதாவது தான் கொண்டு வந்த 2 பூரிகளையும் ஒன்றாக சுருட்டி சாப்பிட்டுள்ளான்.
இதனால் மாணவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், உடனடியாக ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள், மாணவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், வீரேன்ஜெயின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற மாணவனின் பெற்றோர், கண்ணீர் விட்டு கதறி அழுதது பார்ப்பவரின் நெஞ்சை பதற வைத்தது. இது குறித்து மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் முதல்கட்டமாக 3 பூரிகளை ஒன்றாக ஒரே நேரத்தில் சுருட்டி சாப்பிட முயற்சித்ததால், மாணவனின் மூச்சுக்குழலில் பூரி அடைத்துவிட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாணவன் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.