News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சட்டவிரோதமாக விளம்பரப் பலகைகளை வைத்திருந்தால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


சென்னையில் சாலையின் நடுவே இருந்த விளம்பரப் பலகை விழுந்து இளம்பெண் பலியானார். அதே போல் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிகம்பம் அமைத்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான்.


இதுபோன்ற துயரசம்பவங்களை சுட்டிக்காட்டி, விளம்பர பலகைகளை தடையை மீறி வைக்க அனுமதியளித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


அப்போது தமிழக அரசு சார்பில், தமிழ்நாட்டில் பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறி செயல்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம், அரசுக்கு உதரவிட்டது.


இவ்வழக்கின் விசாரணை அக்டோபர் 5ம் தேதி தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘தமிழ்நாட்டில் சட்டத்துக்கு புறம்பாக விளம்பர பலகைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை. அதை மீறி வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும். பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது’’ என்று அரசு வழக்கறிஞர் முத்துக்குமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


இதை கேட்ட நீதிமன்ற அமர்வு, அரசு தரப்பில்  தெரிவிக்கப்படும் அனைத்து பதில்களையும் மனுவாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இவ்வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link