News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மல்யுத்த வீராங்கனைளை பிரிஜ் பூஷன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உண்மைதான் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவராக பதவி வகித்து வந்தவர் பிரிஜ்பூஷன். இவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பாக வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகத் மற்றும் முன்னணி வீரரான பஜ்ரங் பூனியா உள்ளிட்ட பலர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் மீது போலீசார் அடக்குமுறையை கையாண்டது சர்வதேச விளையாட்டுத்துறையினர் மற்றும் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலீசார் 2 எப்.ஐ.ஆர்.களை பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் பிரஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கு குறித்து கடந்த ஜூலை மாதம் டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது பதிலளித்த டெல்லி போலீசார், ‘‘தஜிகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரிஜ் பூஷன் ஒரு வீராங்கனையை அறைக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்துள்ளார். வீராங்கனை அதற்கு வீராங்கனை எதிர்ப்பு தெரிவிக்க, தான் ஒரு தந்தையை போல் தான் கட்டிப்பிடித்தேன் என்று பிரிஜ் பூஷன் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று பிரிஜ் பூஷன் மற்றொரு மல்யுத்த வீராங்கனை அணிந்திருந்த மேலாடையை விலக்கி, தகாத முறையில் நடந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்கு தகுந்த நியாயம் கூடிய விரைவில் கிடைக்கும் என்பது தற்போது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link