Share via:
பெற்ற தாயை கொலை செய்த மகன் அவரின் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூரம் மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளது. அந்த கொடூரனுக்கு ரொம்பவும் ஸ்பெஷலான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அது என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
கடந்த 2017ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் குச்சொரவி என்ற இளைஞர் தனது 63 வயது தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தாயை கொடூரமாக கொலை செய்த குச்சொரவி, அவரின் உடலின் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளார். இதயம் மற்றும் விலா எலும்புகளை எண்ணெயில் வறுத்து சாப்பிட முயற்சியும் செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து போலீசார் குச்சொரவியை கைது செய்து விசாரணை நடத்தினர். மராட்டிய மக்களின் குலைநடுங்கச் செய்த கொலை குறித்த விசாரணை கோலாப்பூர் நீதிமன்றத்தில் கடந்த 7 வருடமாக நடந்துள்ளது. இறுதியில் கோலாப்பூர் நீதிமன்றம், குச்சொரவிக்கு மரண தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து கொலையாளி மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இதை விட கொடூரமான வழக்கை நாங்கள் சந்தித்தது கிடையாது. குச்சொரவிக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால் அவர் மற்ற கைதிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார். அதே சமயம் இவர் திருந்துவதற்கான வாய்ப்பும் இருப்பதாக தெரியவில்லை. எனவே கோலாப்பூர் நீதிமன்றம் வழங்கிய மரணதண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.