Share via:
திருப்பதி பிரம்மோற்சவம் கடந்த செப்.18ம் தேதி தொடங்கிய நிலையில் 9 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருமலை திருப்பதியில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் படைக்கும் கடவுளான பிரம்மதேவனை அழைத்து உலகநன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த உத்தரவிட்டதாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்ற பிரம்ம தேவன், புரட்டாசி மாதத்தில் திருவோணநட்சத்திரம் அன்று நிறைவு பெறும் வகையில் தொடர்ந்து 9 நாட்கள் உற்சவத்தை நடத்தியதால் இதற்கு பிரம்மோற்சவம் என்று பெயர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி நேற்று (செப்.24) ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீமலையப்ப சுவாமிக்கு வண்ண வளையல்கள், அத்தாப்பழங்கள், வட்டிவெரு, குருவேரு, ரோஜா மாலைகள், ஸ்நானம் திருமஞ்சனம் நடைபெற்றது. ஸ்ரீவாரி கோயிலில் உள்ள ரங்கநாயக்கன்குல மண்டபத்தில் மதியம் ஒரு மணிக்கு தொடங்கிய சேவை 3 மணி வரை நடைபெற்றது. இதில் அர்ச்சகர்கள் திருமஞ்சன ஸ்நானம் விஞ்ஞான பூர்வமாக நடத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரம்மோற்சவ விழா சிறப்பு நாளில் சுவாமியை தரிசித்து கோவிந்தா கோவிந்தா என பக்தி பரசவத்துடன் கோஷமிட்டு வழிபட்டனர்.