Share via:
ஒரே நேரத்தில் ஒலித்த லட்சக்கணக்கான செல்போன்கள்! மக்கள் அதிர்ச்சி!
லட்சக்கணக்கானவர்களின் செல்போன்கள் ஒரே நேரத்தில் ஒலித்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட செல்போன் சேவைகளை பயன்படுத்துவோர்களின் செல்போன்கள் இன்று காலை 11.27 மணியளவில் எம்ர்ஜென்சி அலர்ட் என்ற பெயரில் ஒலிக்க ஆரம்பித்தது. இந்த எச்சரிக்கை ஒலி தன்னுடைய செல்போனில் மட்டும்தான் வருகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அடுத்தடுத்த செய்தி என்னவென்றால் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்களின் செல்போனில் ஒலித்தது.
இது குறித்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், ‘‘சுனாமி உள்ளிட்ட பேரிடரின் போது அவசர கால தகவல் தொடர்பை மேம்படுத்த செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
எச்சரிக்கை ஒலித்த நேரத்தில் செல்போன்கள் ஒலித்ததும், எங்கே தங்கள் செல்போன் வெடித்துவிடுமோ அல்லது பணப்பரிமாற்ற மோசடி ஏதேனும் நடந்துவிடுமோ என்றும் கூட சில பொது மக்கள் பயந்துநடுங்கிய சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்றது.