Share via:
லியோ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை எட்டுமா என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் பகிரங்கமாக பல தகவல்களை வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 19ம் தேதி வெளியான திரைப்படம் லியோ. இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.148 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை அறிந்து கொண்ட நடிகர் விஜய்யின் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித், ‘லியோ திரைப்படம் நிச்சயமாக ரூ.1,000 கோடி அளவுக்கு வசூல் செய்யாது என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால், இந்தி மார்க்கெட் இருந்து பெரிய அளவில் வசூலை எதிர்பார்க்கவில்லை என்று லலித் வெளிப்படையாக பேசினார்.
தொடர்ந்து பேசிய லலித், ‘‘லியோ படத்தின் அதிகாலை காட்சிகளுக்கு நான் நீதிமன்றம் சென்ற போது, ‘‘நீ எதற்காக நீதிமன்றம் சென்றாய்? 4 மணிக்காட்சி குறித்து அரசு சொல்வதை மீறி நாம் எதுவும் செய்யக்கூடாது. பிறகு மாநிலங்களிலும் 4 மணி காட்சிகள் இடம்பெறவில்லை என்றால் பரவாயில்லை’’ என்று லலித்திடம் நடிகர் விஜய் கோபித்துக் கொண்டதாக அவரே வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதெல்லாம் இருக்கட்டும் லியோ திரைப்படம் கண்டிப்பாக ரூ.1,000 கோடி வசூல் செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்தே இப்படி சொல்லலாமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

