Share via:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, டிமான்டி காலனி 2 திரைப்பட தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடிகர் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்டிகாலனி பெரியளவில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி அப்படக்குழுவினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதால் அதைத்தொடர்ந்து டிமான்டி காலனி2 திரைப்படம் தயாராகும் என்ற அறிவிப்பு வெளியானது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டிமான்டிகாலனி 2 திரைப்படத்தில் அருள்நிதி, நடிகை பிரியாபவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகிறார்கள். இதற்கிடையில் டிமான்டி 2 திரைப்படத்தின் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.