Share via:
வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்ந்துள்ளது ஓட்டல் உரிமையாளர்களை கலக்கமடைய செய்துள்ளது.
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம்.
கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ஏற்ற, இறக்கமாகவே இருந்து வருகிறது. இன்று நவம்பர் 1ம் தேதி என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.1,898 விற்கப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை தற்போது ரூ.1,999.50 ஆக உயர்ந்துள்ளது ஓட்டல் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.918.50க்கு விற்கப்படுகிறது.
ஒரு பக்கம் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. மற்றொரு பக்கம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது ஓட்டல் உரிமையாளர்களை, உணவு பண்டங்களின் விலையை ஏற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.