Share via:
சென்னை அண்ணாசாலையில் இன்று (அக்.10) முதல் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலை போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். பீக் ஹவர்ஸ் மட்டுமல்லாது மற்ற நேரங்களிலும் கூட சென்னை அண்ணாசாலையில் எப்போதும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.
இந்நிலையில் இன்று முதல் அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஸ்மித்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அண்ணாசாலை, ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை வழியே செல்லாம். ஆனால் ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து எந்த வாகனமும் அண்ணாசாலை வழியாக செல்ல அனுமதி கிடையாது.
பட்டுல்லாஸ் சாலையும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. ஒயிட்ஸ் சாலை, பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் பயணிக்கும் வாகனங்கள் அண்ணசாலை செல்ல அனுமதிக்கப்படும் அதே நேரத்தில், அண்ணாசாலை, பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி கிடையாது. எனவே இந்த வானகங்கள் நேராக ஸ்மித்சாலை சந்திப்புக்கு இடது புறமாக திரும்பி ஸ்மித்சாலை மற்றும் ஒயிட்ஸ் சாலையை சென்றடையலாம்.
அதேபோல் ராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை சென்று அண்ணாசாலை நோக்கி பயணிக்கும் வாகனங்கள், இனி பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் வலது புறமாக திரும்பி, பட்டுல்லாஸ் சாலை, அணணாசாலை மார்க்கமாக செல்ல வேண்டும். ஆனால் இந்த வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக செல்ல அனுமதி கிடையாது.
திரு.வி.க.சாலை, ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள், நேராக பட்டுல்லாஸ் சாலை சந்திப்புக்கு சென்று இடதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணாசாலைக்கு செல்ல வேண்டும். ஸ்மித்சாலை செல்ல அனுமதி இல்லை.
மேலும் அண்ணாசாலை, பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து பின்னி சாலை மற்றும் பிராட்வே நோக்கி பயணிக்க வேண்டிய வானக ஓட்டிகள் இடது புறமாக திரும்பி அண்ணசாலையில் ஸ்பென்சர், எதிர்புறம் உள்ளே யு வளைவில் செல்ல வேண்டும். அதன் பின்னர் பின்னி சாலை, பிராட்டே நோக்கி செல்ல வேண்டும் என்று காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சோதனை முறையில் இந்த மாற்றங்கள் வெற்றியடைந்துவிட்டால், விரைவில் இதே மாற்றங்கள் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.