News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பயிற்சி மேற்கொண்டிருந்த 30 வயது விமான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் டெல்லியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானியாக 30 வயதான ஹிம்மனில் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று (நவ.16) காலை முனையம் 3ல் பயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென்று ஹிம்மனில்குமாருக்கு லேசான நெஞ்சவலி ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ஹிம்மனில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

உயிரிழந்த ஹிம்மனில்குமார சிறிய அளவிலான விமானங்களை இயக்கி வந்ததாகவும், சமீபத்தில்தான் பெரிய விமானங்களை இயக்க பயிற்சி மேற்கொண்டதாகவும் தெரிகிறது. மேலும் விடுமுறை முடிந்து மீண்டும் பயிற்சிக்கு வந்த நிலையில் இப்படி ஒரு சோகமுடிவு ஏற்பட்டுள்ளது. விமானியின் திடீர் உயிரிழப்பு சக ஊழியர்கள் மத்தியிலும், அவரது குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாகவே இளவயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link