Share via:
நடிகர் ஷாம் ரா ஏஜெண்டாக நடித்து வரும் திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 20 வருடங்களாக நடிகர் ஷாம் தமிழ் திரையுலகில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் லேசா லேசா, 12பி உள்ளிட்ட திரைப்படங்கள் நடிகர் ஷாம் திரைப்பயணத்தில் பெரிய மைல் கற்களாக அமைந்தன. அதைத்தொடர்ந்து தில்லாலங்கடி திரைப்படத்தை தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.
சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் அவரது அண்ணன் வேடத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார்.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீனு வைட்லாவின் புதிய திரைப்படம் ஒன்றில் நடிகர் ஷாம் முதன்முறையாக, ரா ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 20 நாட்களாக மிலன், மடோரா மற்றும் ரோம் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. அப்பகுதிகளில் அதிரடியான 3 சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் படக்குழுவினர் இந்தியா திரும்பியுள்ளனர்.
இத்திரைப்படத்தில் நடிகர் ஷாம், கோபிசந்த் மற்றும் காவ்யா தாப்பர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நடிகர் ஷாமின் புகைப்படங்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

