Share via:
நாகப்பட்டினம்- இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை முதல் தொடங்கப்பட உள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவின் நாகப்பட்டினம்- இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை நாளை (அக்.14) தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன்படி பயணிகள் முனையத்தில் குடியுரிமை, சுங்கத்துறை ஆகிய பிரிவுகளின் சார்பில் சோதனை செய்யும் கருவி, அடிப்படை தேவைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. முதல் நாள் சேவையை¬ முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் பயணிகளிடம் 3 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்த பயணிகள் கப்பலின் முதல் நாள் பயணத்தி போது 35 பேர் இலங்கைக்கு செல்ல டிக்கெட் முன்கூட்டியே பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை முதல் தொடங்க உள்ள பயணிகள் கப்பல் சேவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.