News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

திருவள்ளூர்- சிங்கபெருமாள் கோவில் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க 6 வழிச்சாலை அமைக்கப்பட உள்ள தகவல் வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த சென்னை என்று கூறுமளவுக்கு சிங்கப்பெருமாள் கோவில் மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. வீட்டு மனை வாங்குவோர் மற்றும் வேலை தேடி செல்வோர் வரை அவ்விடம் பரந்துவிரிந்து கிடக்கிறது. இதனால் திருவள்ளூர்- சிங்கப்பெருமாள் கோவில் இடையே போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.


மேலும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கனகர வாகனங்கள் என புறநகர் பகுதிகளில் இருப்பதால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


எனவே கனரக வாகனங்கள், கார், வேன் போன்ற வாகனங்கள் நகர எல்லைக்குள் செல்லாமல் சுற்றுவட்ட சாலை பயன்படுத்தி கடந்து செல்ல ஏதுவாக வெளிவட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு சாலை கட்டமைப்பு முன்னேற்றக்கழகம் சார்பில் அமைய உள்ள இத்திட்ட அறிக்கை கடந்த 2017ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது.


மேலும் ஸ்ரீபெரும்புதூர்& சிங்கப்பெருமாள் கோவில் இரண்டு வழிச்சாலையில் இருந்து 6 வழிச்சாலையும், ஒரகடம், தொழில்துறை வழித்தடத் திட்டத்தின் கீழ் சர்வீஸ் சாலை அமைப்புடன் இத்திட்ட அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது.


மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி சந்திப்பில் 133 கி.மீட்டர் நீளத்தில் தொடங்கி சிங்கப்பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், தச்சூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகம் வழியாக எண்ணூர் துரைமுகம் வரையில் அமைய உள்ள நிலையில் இதற்கான திட்டம் 6 பிரிவுகளாக செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link