News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

‘சவுந்தரா கைலாசம் இலக்கிய பரிசு’ வழங்கும் விழாவில் ‘நீர்க்கொல்லி’ புத்தகத்துக்கு ரூ.2 லட்சம் இலக்கிய பரிசாக வழங்கப்பட்டது.

 

சென்னை தியாகராய நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று (நவ.19) கடந்த 2022ம் ஆண்டுக்கான ‘சவுந்தரா கைலாசம் இலக்கிய பரிசு’ விழா எழுத்து தமிழ் இலக்கிய அமைப்பு சார்பில் நடைபெற்றது.

 

இவ்விழாவில் எழுத்தாளர் ஷாராஜ் எழுதிய ‘நீர்க்கொல்லி’ நாவல் சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.2 லட்சம் இலக்கிய பரிசை ப.சிதம்பரம் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் வழங்கினர்.

 

அதைத்தொடர்ந்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன் பரிசு வென்ற ‘நீர்க்கொல்லி’ புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அதைத்தொடர்ந்து எழுத்தாளர் மீரான் மைதீன் புத்தக அறிமுக உரையாற்றிய நிலையில், கவிஞர் வைரமுத்து சிறப்புரையாற்றினார். புத்தக மதிப்புரையை எழுத்தாளர் பவா.செல்லத்துரை நிகழ்த்தினார்.

 

பிரமாண்டமாக நடைபெற்ற  இவ்விழாவில் வக்கீல் நளினி சிதம்பரம், எம்.பி. கார்த்தி ப.சிதம்பரம், எம்.எல்.ஏ. விஜயதாரணி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ராஜேந்திரன், கவிஞர்கள் கவிப்பித்தன், ஆதிராமுல்லை உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link