News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

‘சூர்யா 43’ திரைப்படத்திற்காக தேசிய விருது கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது, நடிகர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 43’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் தேசிய விருது வாங்கிய ‘சூரரைப்போற்று’ படக்குழுவினர் இணைந்துள்ளனர்.

அதன்படி இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதாநாயகனாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத், விஜய் வர்மா ஆகியோர் நடிக்கிறார்கள்.

மேலும் இத்திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது இவரின் 100வது திரைப்படம் என்பதால் பாடல்களும், பின்னணி இசையும் மற்றொரு தேசிய விருதை வாங்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சூர்யா 43 திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட்  நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும்  ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஏற்கனவே நடிகர் சூர்யா, இயக்குனர் சுதா கொங்குரா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தேசிய விருது பெற்றிருந்த நிலையில், மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளதற்கான அறிவிப்பு வெளியான உடனேயே ரசிகர்கள் அடுத்த தேசிய விருதை பெறுவதற்கு தயாராகுங்கள் என்று படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link