News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடப்பாண்டான 2023ம் ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்று நிகழ உள்ளது.

நிலவுக்கும், சூரியனுக்கும் நடுவே பூமி வரும்போது ஏற்படும் நிகழ்வையே நாம் சந்திரகிரகணம் என்கிறோம். அந்த வகையில் இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இன்று (அக்.28) நள்ளிரவு 1.03 நிமிடத்தில் துவங்கும் சந்திரகிரகணம் 2 மணி 23 நிமிடத்தில் முடிவடைகிறது.

சந்திரகிரகணத்தை முன்னிட்டு இந்தியாவில் பார்க்க முடியும் என்பதால் 8 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படும் என்று ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டது. அதேபோன்று பழனி முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெற்ற பின் கோவில் நடைகள் சாத்தப்படுகிறது.

அதன் பின்னர் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பூஜை, ஹோமம், சிறப்பு பூஜைகளுக்கு பின்னரே பக்தர்கள் சாமிதரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link