Share via:
கஸ்தூரி சிறையில் மினரல் வாட்டர் குடிக்க முடியாமல், கொசுக்கடியால் அவதிப்படுகிறார் என்றதும் அவருக்கு ஆதரவாக நீதிபதியின் மனைவியே பரிந்துரைக் கடிதம் எழுதும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனின் மனைவி, ‘’நடிகை கஸ்தூரியின் ஜாமீன் வழக்கை கருணையோடு அணுக வேண்டும். கஸ்தூரிக்கு ஆட்டீசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உள்ளது. சிறப்புக் குழந்தையை வளர்க்க கஸ்தூரி தனி ஆளாகப் போராடி வருகிறார்’’ என்று குரல் கொடுத்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘’ஆட்டிசம் பாதித்த குழந்தையை 100 நாட்கள் பிரிந்திருக்க வேண்டும் என்று தெரிந்தே கஸ்தூரி பிக்பாஸ் போனபோது சாமிநாதன் மனைவி என்ன செய்து கொண்டு இருந்தார் ?கஸ்தூரி கொலை செய்திருந்தாலும் இதே கோரிக்கையை தான் காமாட்சி மாமி வைத்திருப்பாரா ? மாற்றுத்திறனாளி குழந்தைக்காக சலுகை கேட்டால் வரும் காலங்களில் கொலைகாரன் கொள்ளைக்காரன் கடத்தல்காரன் போன்றோர் சலுகைக்காகவே மாற்றுத்திறனாளி குழந்தையை தத்தெடுத்து வளர்த்து சலுகை கேட்க மாட்டான் என்பது என்ன நிச்சயம் ?
கஸ்தூரியை போல பல தாய்மார்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் சிறையிலும் இருக்கிறார்கள்.. அவர்களுக்காக வராத குரல் கஸ்தூரிக்கு மட்டும் எப்படி வருகிறது? உயர்நிதிமன்ற நீதிபதியின் மனைவி இப்படி பேசுவது அதிகார துஷ்பிரயோகமில்லையா? இது கீழமை நீதிமன்ற நீதிபதிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ அழுத்தம்கொடுக்கும் செயல் இல்லையா?
ஸ்டான் சுவாமி என்பவர் தமிழ்நாட்டை சார்ந்தவர் . விளும்புநிலை மக்களுக்காக போராடியவர். பழங்குடி மக்களுக்காக போரடியவரை போராட்டத்தை தூண்டியவர் என அவரை இந்த பாசிச பாஜக அரசு கைது செய்ததது. சிறையில் அடைக்கப்பட்டார் . 80 வயது முதியவர். பார்கின்சன் நோயால் ஏற்பட்ட கைநடுக்கம் மற்றும் பிற நோய்கள் காரணமாக மருத்துவரீதியிலான பிணை கேட்டபோது கூட நீதிமன்றம் மறுத்தது. அப்போது எந்த நீதிபதியும் , நீதிபதிகளின் மனைவி என யாரும் குரல் கொடுக்கவில்லை.
சமூகத்திற்காக போராடியவர்கள் மீது காட்டப்படாத இந்த கரிசனம் ப்ரோக்கர்கள் மீதும் ஆணவத்துடன் ஒரு சமுதாயத்தை இழிவுப்படுத்திய ஒரு பெண்மணி மீதும் வருகிறது சட்டம் அனைவருக்கும் சமம் இல்லையா?’’ என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஜாமீன் உறுதி என்கிறார்கள், பார்க்கலாம்.