Share via:
ஹமாஸ் ஊடுருவலால் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் போர் அறிவிப்பு விடுத்துள்ளது சர்வதேச நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனிய போராளிகள் தெற்கு மற்றும் மத்திய இஸ்ரேல் பகுதிகளின் மீது இன்று காலை திடீர் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டனர். மேலும் பல போராளிகள் ஆயுதமேந்தி எல்லை வேலியை கடந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவியதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியது.
அப்போது பாலஸ்தீன போராளிகள் பலர் காயமடைந்ததாகவும், ஒரு பெண் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கொதித்தெழுந்த இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தாங்கள் போருக்கு தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊடுருவல் தாக்குதலின் முதல் ஒரு மணி நேரத்தில் ரிஷான் லெசியன் மற்றும் இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஏவுகணை தாக்குதலும் நடைபெற்றது. இதை நிரூபிக்கும் வகையில் இஸ்ரேலில் வெளியான சில புகைப்படஙகள் ஆயுதமேந்திய சிலர் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து துப்பாக்கிசூடு நடத்துவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இப்புகைப்படங்கள் தற்போதையதா அல்லது முந்தைய காலத்தில் எடுக்கப்பட்டதா என்பதற்கான சரியான விளக்கம் இன்னும் தெரியவில்லை.
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில், ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவமனைகளில் சிறப்பு ரத்ததான முகாம் ஆகியவற்றுக்கு அந்நாடு ஏற்பாடு செய்துள்ளன. இந்த ஆண்டில் இருதரப்பில் நிகழ்ந்த மோதல் சம்பவத்தில் இதுவரை 247 பாலஸ்தீனியர்களும் 32 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டதாக அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

