Share via:
திமுகவுக்கு பென் டீம் போன்று பாஜகவுக்கு மென் டீம் தொடங்கியிருக்கிறார்
புதிய பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன். அதோடு அதிமுகவை விமர்சனம் செய்யும் பா.ஜ.க.வினர்
மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு செய்திருக்கிறார். இந்த நிலையில் நயினாரின்
ஆதரவாளர்கள் அண்ணாமலை போட்டோ போட்டாமல் பிளக்ஸ் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த
விவகாரம் அண்ணாமலை ஆதரவாளர்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது.
இது குறித்து பேசும் அண்ணாமலை ஆதரவாளர்கள், ’’தலைமை மாற்றத்திற்குப்
பிறகு ஏற்படும் பிரச்சனைகளுக்கு யார் காரணம்? கடந்த மூன்று வருடமாக ஆளுங்கட்சியான திமுகவையும்
அதன் ஊழல்களையும் அதிரடியாக தட்டி கேட்டு எழுச்சியுடன் சிறப்பாக செயல்பட்ட ஒரு நேர்மையான
தலைவரை அனைவரும் நேசிப்பது இயல்பான ஒரு விஷயம் தான். அப்படிப்பட்ட தலைவரை மாற்றுகிறார்கள்
என்றால் எல்லோரிடமும் ஒரு அதிருப்தி இருக்கும். அதிலும் 2024 மக்களவை தேர்தலில் நம்
பாரத பிரதமர் மோடிஜியை முதுகில் குத்திய கட்சியுடன் கூட்டணி என்றால் நிறைய பேருக்கு
அதை ஏற்றுக் கொள்வது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும்.
இப்படிப்பட்ட சூழலில் புதிய தலைமை மக்கள் மனதில் இருக்கும் குழப்பத்தை
நீக்க மிகவும் பொறுமையாகவும் கவனத்துடனும் செயல்பட்டு இருக்க வேண்டும். அதை விடுத்து
கடந்த இரண்டு மாதங்களாக என்ன நடந்தது என்று பார்ப்போம்… 1 தலைமை மாறியதும் பெரிதாக
முன்னெடுக்கப்பட்ட மத்திய அரசின் முமொழி கொள்கை திட்டத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கையெழுத்து
இயக்கத்தை கிடப்பில் போட்டது! திமுகவின் டாஸ்மாக் ஊழலை எதிர்த்து செய்த மாபெரும் போராட்டத்தை
கிடப்பில் போட்டது! இந்த செயல்களின் மூலம் இதுவரை பாஜக செய்து வந்த aggressive பாலிடிக்ஸ்
இனிமேல் தொடராது என்று அனைவருக்கும் புரிய வைக்கப்பட்டது.
கூட்டணி அமைந்ததும் அதிமுக தலைவர்கள் பாஜகவை பற்றி தவறாக பேசியதை
கண்டித்து கூட்டணி கட்சியின் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால்
அதை செய்யாமல் மௌனம் காத்தது இங்கே நிறைய பேருக்கு அதிருப்தி ஏற்பட செய்தது.
ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் கட்சியை பற்றி ஒரு விமர்சனம் வைக்கிறார்கள்
என்றால் அதை கட்சி தலைமை தலையிட்டு சரி செய்திருக்க வேண்டும் அதைவிடுத்து JVC,
Seshadri, maridas, kola, pandey, savukku போன்ற paid political brokers மூலம் அதிருப்தியில்
இருந்த தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் மீது Rabid Dogs, wash room கோமாளிகள் என்று
பல பொய்யான அவதூறுகளை பரப்பும் பொழுது கட்சி மௌனமாக இருந்து அப்படி பேசுபவர்களை ஊக்கப்படுத்தியது
அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது! 4 தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களால் மிகவும் மதிக்கப்படுகிற
முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையாரின் மீது கூட்டணி கட்சியை சார்ந்த நபர்கள் தொடர்ந்து
அவதூறு பரப்பி கொண்டிருக்கும் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு தற்பொழுது
தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பதிலடி கொடுக்கும் பொழுது சொந்த கட்சியினர் மீது நடவடிக்கை
எடுக்கப்படும் என்று மிரட்டல் துணியில் பேசுவது என்ன நியாயம்?’’ என்று கேட்கிறார்கள்.
நயினார் முதல்ல இப்படி பேசுறவங்க மீது நடவடிக்கை எடுங்க.