Share via:
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் போட்டித் தொடரின் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது.
50 ஓவர்கள் கொண்ட 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டித் தொடரில் இந்திய அணி தனது 4வது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி 41.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 261 ரன்களை குவித்தது. அதன்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தனது வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் 2023 உலகக்கோப்பை தொடர் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து 2வது இடத்திலேயே நீடித்து வருகிறது. அதே சம புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி, நெட் ரன் ரேட் அடிப்படையில் முதல் இடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது. நடப்பு தொடரில் இந்த இரு அணிகள் மட்டுமே எந்த அணியுடனும் தோற்காமல் தொடர் வெற்றிகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.