Share via:
காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர வீட்டு படுக்கை அறை மெத்தையின் கீழ் ரூ.42 கோடியை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களையும், கணக்கில் வராத ரொக்கத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பெங்களூரில் உள்ள காங்கிரஸ் ன்னாள் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டிற்கு நள்ளிரவு சென்ற வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பெங்களூர் மாநகராட்சியின் 95வது வார்டு கவுன்சிலராக இருந்த அஸ்வத்தம்மாவின் கணவர் அம்பிகாபதி ஒப்பந்ததாரர் தொழில் செய்து வருகிறார.
இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான ஆர்.டி.நகர் பகுதியில் உள்ள 2 வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்ட போது மெத்தைக்கு அடியில் 23 பெட்டிகளில் ரூ.42 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் சில சொத்து ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஒரு கவுன்சிலர் வீட்டில் இத்தனை கோடி பணமா என்று அதிர்ந்து போன அதிகாரிகள், ஒரு கவுன்சிலர் வீட்டிலேயே இத்தனை கோடியிருந்தால், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் வீட்டில் எத்தனை கோடி ரூபாய் பதுக்கப்பட்டு இருக்கும் என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து வருமானவரித்துறையினர் ஒரு பட்டியலையே தயார் செய்து சோதனையை கட்டமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாக எங்கே தங்கள் வீட்டிலும் சோதனை நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள். திருடனுக்கு தேள் கொட்டினால் இப்படித்தான்.