News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சிக்கிம் மாநிலத்தில் தீஸ்தா நதியில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. லச்சேன் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. அதன் காரணமாக தீஸ்தா நதியில் திடீரென்று காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோடியது.


அப்போது பள்ளத்தாக்கில் முகாமிட்டிருந்த ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் சிக்கினர். இதில் 23 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில வாகனங்கள் சேற்றில் மூழ்கியும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.


வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ராணுவ வீரர்களை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராணுவ வீரர்களை உயிருடன் மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மீட்புக்குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link