News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

 

உச்சநீதிமன்றத்திற்கு வெளியே தன்பாலின தம்பதி மோதிரம் அணிந்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பளித்தது. அயல்நாடுகளில் தன் பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளார்கள் என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

 

அந்த சுவடு மறையாத சூழ்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. டெல்லியில் செயல்பட்டு வரும் உச்சநீதிமன்றத்தின் நுழைவுவாயிலில் டெல்லியைச் சேர்ந்த தன்பாலின ஈர்ப்பாளர்களும், வழக்கறிஞர்களுமான அனன்யா கோட்டியாவும், உத்கர்ஷ் சக்சேனாவும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

 

இது குறித்து அனன்யா கோடியா கூறும்போது, ‘‘எங்கள் உரிமை மறுக்கப்பட்ட இடத்தில், நாங்கள் மோதிரம் மாற்றிக் கொண்டோம். அதனால் இந்த வாரம் சட்ட இழப்பு மட்டுமில்லாமல், எங்கள் நிச்சயதாரத்தமும் நடந்த வாரம். நாங்கள் மீண்டும் போராடுவோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலானதோடு மட்டுமல்லாமல், இந்திய சட்டத்திட்டத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link