Share via:
மதுரையில் பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா ஆஸ்டியன்பட்ட அருகில் உள்ளது கருவேலம்பட்டி ரெயில்வேகேட். இப்பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தது நெல்லை மாவட்டம் பாளையசெட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது.
மேலும் கிருஷ்ணகுமார் என்பவர் பிரபல ரவுடி என்றும், அவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குககள் நிலுவையில் இருப்பதும், முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாகவும் போலீசார் சந்தேகித்து வருகின்றனர்.
கிருஷ்ணகுமார் மரணம் குறித்து சிவபிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். பிரபல ரவுடி மர்ம நபர்களால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.