News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் ஈரோட்டில் அரங்கேறி வருகிறது.


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக ராமேஸ்வர முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இதற்கு முன் ராமேஸ்வர முருகன் பள்ளிகல்வித்துறை இணை இயக்குனராக பணியாற்றிய காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.


சென்னையில் வசித்து வரும் ராமேஸ்வரமுருகனுக்கு, ஈரோடு மாவட்டட் கோபிசெட்டிப்பாளையம் அடுத்த வெள்ளாளங்கோவில் பகுதியில் சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் இவரின் தாய் தந்தையர் வசித்து வருகின்றனர்.


தொடர் புகார் காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று ராமேஸ்வரமுருகனின் ஈரோடு வீட்டில் 6 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. அதோடு அவரின் தந்தை மற்றும் மாமனார் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


முன்னதாக வீட்டுக்குள் அதிகாரிகள் அனுமதிக்கப்படாத நிலையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியையும் அலசி ஆராயும் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள், ராமேஸ்வர முருகனின் மாமனாருக்கு சொந்தமான நகைக்கடையிலும் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link