News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போது என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இத்திரைப்படத்தில் மொத்த நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் பான் இந்தியா படமாக பார்க்கப்படுகிறது.

 

இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய்தத், கவுதம்வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி, மேத்யூதாமஸ் என மொத்த நட்சத்திர பட்டாளமே நடித்து முடித்துள்ளது. அதன்படி அக்டோபர் மாதம் 19ம் தேதி உலகளவில் லியோ வெளியாக உள்ளது.

 

இத்திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா செப்.30ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் நடிகர் விஜய் சொல்லப் போகும் குட்டி ஸ்டோரி என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில் 30ம் தேதி நடைபெற இருந்த இசை வெளியீட்டு விழாவை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ரத்து செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

 

இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள லியோ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வருகிற அக்டோபர் 14ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், டிக்கெட் முன்பதிவு செய்தி அவர்களை குஷிபடுத்தியுள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை டிக்கெட் முன்பதிவிலும், திரைப்படத்தின் வெற்றியிலும் ரசிகர்கள் ஆறுதல் அடைவார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

 

அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட்டுகள் பல வாரங்களுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்டுவிடும் என்று தியேட்டர் உரிமையாளர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link