Share via:
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் தனது சொந்த கட்சியின் அதிருப்தியால் பதவிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டின் 234 ஆண்டு கால வரலாற்றை திருப்பிப் போட்டுள்ளது.
வருகிற 2024ம் ஆண்டு அமெரிக்கா அதிபர் தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகரான கெவின் மெக்கார்த்தி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகராக பதவி வகித்து வந்தார். இவர் ஜனநாயக கட்சியுடன் இணக்கமாக செல்வாக சொந்த கட்சியான குடியரசுக் கட்சியினரே குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இது குறித்த விவாதத்திற்கு பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் 216 வாக்குகள் பெற்று தீர்மானம் வெற்றி பெற்றதால் கெவின் மெக்கார்த்தி சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
சொந்த கட்சியினரான சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவின் 234 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்றுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது வருகிற 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் என்று சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

