Share via:
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பா.ஜ.க.வின்
பிரிஜ் பூஷனுக்கு இந்த முறை பா.ஜ.க.வில் சீட் கிடைக்காது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில்,
அவரது மகனுக்கு சீட் கொடுத்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப் பிரதேசம் – கைசர்கஞ்ச் தொகுதி மக்களவை உறுப்பினராக 3 முறை
வெற்றி பெற்ற பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி நடவடிக்கை
எடுக்கக் கோரினார்கள். ஆனால், பா.ஜ.க. இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உலக அளவில் இந்த விவகாரம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் கைசரகஞ்ச் தொகுதியின் தற்போதைய
எம்.பி.யான பிரிஜ் பூஷணுக்கு பதிலாக, இந்த முறை அவரது மகன் கரண் பூஷண் சிங்குக்கு பாஜக
வாய்ப்பளித்துள்ளது. மல்யுத்த வீராங்கணைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு பிரிஜ் பூஷனின்
இளைய மகன்தான் கரண் பூஷண் சிங். இவர் தற்போது உத்தரப் பிரதேச மாநில மல்யுத்த கூட்டமைப்பின்
தலைவராக உள்ளார். அதேபோல், கோண்டாவின் நவாப்கஞ்சின் கூட்டுறவு கிராம வளர்ச்சி வங்கியின்
தலைவராகவும் உள்ளார்
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக
இருந்த பிரிஜ் பூஷனுக்கு எதிராக டெல்லி ஜந்தர்மந்தரில் சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங்
புனியா போன்ற மல்யுத்த வீரர்கள் பல வாரங்கள் போராட்டம் நடத்தினர். வீரர், வீராங்கனைகளின்
போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிஜ் பூஷணுக்கு எதிராக போலீஸார்
வழக்குப் பதிவு செய்தனர். ஆனாலும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் புகாரில் சிக்கியவர்களுக்கு சீட் கொடுத்தே தீர வேண்டும்
என்பதில் பா.ஜ.க. இத்தனை பிடிவாதம் காட்டக்கூடாது என்று சொந்தக் கட்சியினரே அதிருப்தி
தெரிவிக்கிறார்கள்.