‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். அவருக்கு வயது 41. யோகிபாபு நடிப்பில், “கெணத்த காணோம்’ என்ற படத்தை இயக்கி வந்த சுரேஷ் சங்கையா, அப்படத்தின் ரிலீஸுக்கு முன்பாக உடல்நலக் குறைவால்  கலம்மனர் , இச்சம்பவம்  தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியடைய செய்தது.

 

வித்தியாசமான கதைக்களுடன்  படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்த சுரேஷ் சங்கையா. காக்கா முட்டை திரைப்பட இயக்குநர் மணிகண்டனின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சுரேஷ் சங்கையா. அதன்பிறகு தனது பாணியில் கிராமக் களம் சார்ந்த படங்களை இயக்கத் தொடங்கினார்.

 

 கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் தான் சுரேஷ் சங்கையா இயக்கிய முதல் படம் . இந்தப்படம் விமர்சன  ரீதியா பெரியளவில்  கவனம் பெற்றது . பல விருதுகளையும் பெற்றது.

 

இதைத்தொடர்ந்து கடந்த 2023-ல் ‘சத்திய சோதனை’ படத்தை இயக்கி இருந்தார் சுரேஷ் சங்கையா , இந்தப் படம் , OTT தளத்தில் வெளியாகி பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றது 

 அதை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் செந்தில் நாயகனாக நடிக்க, ஒரு படத்தை இயக்கினார் சுரேஷ் சங்கையா. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், படம் வெளியாகவில்லை.

 இதைத்தொடர்ந்து அடுத்த திரைப்படத்தை யோகிபாபுவை வைத்து இயக்கி வந்தார் சுரேஷ் சங்கையா. ‘கெணத்த காணோம்’ என டைட்டில் வைக்கப்பட்டது படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வந்ததாகவும், விரைவில் ஓடிடி தளத்தில் வெளியகும் என கூறப்படுகின்றனர் .

 

இதைத்தொடர்ந்து சுரேஷ் சங்கையா மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவைத்தார் , ஆனால்  கல்லிரல் பாதிப்படைந்து  சிகிச்சை பலனின்று நேற்று காலமானார் .

 

கோவில்பட்டி அருகில் உள்ள கரிசல்குளத்தை சேர்ந்தவர் சுரேஷ் சங்கையா. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் சங்கையாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link