Share via:
கேப்டன் மறைவைத் தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலகத்தில் கலந்து கொள்ள முடியாத திரைப்பிரபலங்கள் தற்போது சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த (2023) டிசம்பர் 28ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக வந்து கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் தமிழக அரசின் இறுதிமரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையில் புத்தாண்டு கொண்டாட சென்ற பல பிரபலங்கள் வெளிநாடு சென்றிருந்த நிலையில் தற்போது ஒவ்வொருவராக திரும்பி வந்து கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கும் அவரது வீட்டிற்கும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர்கள் சிவராஜ்குமார் தனது மனைவியுடன், சிவகுமார், சூர்யா, கார்த்தி, சசிகுமார், இன்று (ஜன.6) சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் சாலி கிராமத்தில் உள்ள கேப்டன் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல் நடிகர் ஆதி, அவரது மனைவியும் நடிகையுமான நிக்கி கல்ராணியுடன் அஞ்சலி செலுத்தினார்.