Share via:
ரஜினிகாந்தின் 170வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கு அடுத்ததாக ‘தலைவர் 170’ திரைப்படத்தில் தற்போது பிசியாகி உள்ளார்.
இத்திரைப்படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் டைரக்ட் செய்கிறார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், பகத்பாசில், ராணா ரகுபதி, நடிகைகள் மஞ்சுவாரியர், ரித்திகாசிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘தலைவர் 170’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியுள்ளது. கேரள மாநில தலைவர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பிரபல வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பிரபல ஓட்டலுக்கு வருகை புரியும் வீடியோ தற்போது எக்ஸ் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னதாக நேற்று (அக்.3) சென்னை விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற வீடியோ வெளியானதால் இந்த அனைத்து தகவல்களும் உண்மை என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தலைவர் 170 திரைப்படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்பதில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

