Share via:
தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் குறித்து முடிவு எடுக்க வேண்டும்
என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க முடியாது
என்று தெரிவித்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் தனிச் சின்னத்தில் போட்டியிடப்
போகிறோம் என்று ம.தி.மு.க.வும் விடுதலை சிறுத்தைகளும் அறிவித்திருந்தன. அதன்படி இரண்டு
கட்சிகளும் பம்பரம், பானை சின்னம் கேட்டிருந்தன.
அதேநேரம் பா.ஜ.க.வின் கூட்டணியில் இருக்கும் ஜி.கே.வாசனின் தமிழ்
மாநில காங்கிரஸ் கட்சியும் ராமதாஸின் பா.ம.க. கட்சியும் அங்கீகாரத்தை இழந்த கட்சிகள்
என்றாலும் அந்த கட்சிகளுக்கு முறையே சைக்கிள் சின்னமும், மாம்பழம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன
ஆனால், நீதிமன்றம் சென்ற பிறகும் வைகோவுக்கு பம்பரம் சின்னம் கொடுக்கப்படவில்லை.
சுயேட்சை சின்னம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தை வைகோ நாடியிருக்கிறார்.
அதேபோல் நாம் தமிழர் கட்சியும் கடும் அதிருப்தியில் இருக்கின்றன.
தங்களுக்கு விருப்பமான சின்னத்தைக் கேட்டு கிடைக்காத வருத்தத்தில் இருக்கின்றன. சுயேட்சை
சின்னத்தில் போட்டியிடும்போது வாக்குகள் சேகரிப்பதில் கடும் பின்னடைவை சந்திக்க நேரிடும்.
அதேநேரம், பா.ஜ.க.வினரே எல்லாமே ஜனநாயக முறைப்படி நடைபெறுகிறது என்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது
சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதா என்ற குழப்பத்தில் இருக்கின்றன கூட்டணிக் கட்சிகள்.