News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் மெட்ரோ ரெயில் சுரங்கம் அமைக்கும் பணிக்காக கட்டிடங்களை அகற்றும் பணி நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது.

 

மெட்ரோ ரெயில் திட்டத்தில் 2 வழித்தடங்களில் ஏற்கனவே சேவை பயன்பாட்டில் உள்ள நிலையில் 2வது திட்டத்தில் 3வது வழித்தடத்தில் மாதவரம்- சிப்காட் வரையிலும், 4வது வழித்தடத்தில் கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை வரையிலும், 5வது வழித்தடத்தில் மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலும் அமைக்கப்பட உள்ளது.

 

இதில் 5வது வழித்தடத்தில் சோழிங்கநல்லூர், குளோபல் மருத்துவமனை, பெரும்பாக்கம், மேடவாக்கம் ஜங்ஷன், காமராஜ் கார்டன், மேடவாக்கம் கூட்ரோடு, வெள்ளக்கல், கோவிலம்பாக்கம், ஈச்சங்காடு, கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், வாணுவம்பேட்டை, ஆதம்பாக்கம், பரங்கிமலை, ஆலந்தூர், பட்ரோடு, சி.டி.சி. சத்தியா நகர், டி.எல்.எப்.போரூர் ஜங்ஷன், ஆலப்பாக்கம், காரப்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், இளங்கோ நகர் பஸ் ஸ்டாப், சாய் நகர் பஸ் ஸ்டாப், கிரெயின் மார்க்கெட், கோயம்பேடு, காளியம்மன் கோயில் தெரு, கேந்திரவித்யாலா, திருமங்கலம், அண்ணாநகர் டெப்போ, வில்லிவாக்கம் பஸ் டெர்மினல், வில்லிவாக்கம் மெட்ரோ, ஸ்ரீனிவாசா நகர், கொளத்தூர் ஜங்ஷன், ரெட்டேரி ஜங்ஷன்,  சாஸ்திரி நகர், வேல்முருகன் நகர், மஞ்சம்பாக்கம், வேணுகோபால் நகர், மாதவரம் ஆகிய ரெயில் நிலையங்கள் வர உள்ளது.

 

இதில் வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் மெட்ரோ ரெயில் சுரங்கம் அமைக்கும் பணிக்காக நள்ளிரவு முதல் கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்பணியால் பொது மக்கள் பாதிக்கப்படாமல்  இருக்கவும் பல்வேறு உத்திகள் கையாளப்பட்டு வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link