News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ரூ.80 கோடி அளவுக்கு வங்கி மூலம் பணப்பரிவர்த்தனை செய்துள்ள நீங்கள் ஏன் இன்னும் கடனை திரும்ப செலுத்தவில்லை என்று நடிகர் விஷாலை நீதிமன்றம் சரமாரியாக கேள்வியால் துளைத்தது.

 

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் லைக்காவுக்கும், நடிகர் விஷாலுக்குமான பணப்பிரச்சினை என்றுதான் முடியும் என்ற அளவுக்கு நீண்டுகொண்டே செல்கிறது. விஷால் தயாரிப்பாளர் என்ற முறையில் லைக்கா நிறுவனத்திடம் ரூ.21 கோடியே 25 லட்சம் பெற்றுவிட்டு திருப்பித்தரவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது.

 

ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக ரூ.15 கோடி பணத்தை நீதிமன்றத்தில் விஷால் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டும் இன்னும் விஷால் அந்த பணத்தை செலுத்தாமல் இருக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் விஷால் கடந்த 2021ம் ஆண்டு நடந்த வங்கி பணப்பரிவர்த்தனையை தாக்கல் செய்த போது ரூ.80 கோடிக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தது தெரியவந்துள்ளது. இதை கவனித்த நீதிபதி, இவ்வளவு பணப்பரிவர்த்தனை செய்தும் ஏன் நீதிபதி அஅப்துல் உத்தரவிட்ட அந்த 15 கோடி ரூபாய் பணத்தை திருப்பித்தரவில்லை. அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி வழக்கை வரும் நவம்பர் 1ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link