Share via:
ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன் என்று மேடைக்கு மேடை பேசிவரும் நடிகர்
விஜய் மூன்று ஊழல் வழக்குகளில் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அதாவது
2012ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதியில் நுழைவு வரி ஏய்ப்பு, 2017ம் ஆண்டு ரெய்டில்
பணம் பறிமுதல், 2020ம் ஆண்டு புலி பட வருமானத்தில் 15 கோடி ரூபாய் மறைத்ததாக குற்றச்சாட்டு.
இந்த நிலையில் இன்று புலி திரைப்படம் குறித்த வழக்கில் தீர்ப்பு
வெளியாகியுள்ளது. அதாவது, 2015-ம் ஆண்டு வெளியான ‘புலி’ திரைப்படம் அந்த படத்தில் நடித்ததற்காக
விஜய் பெற்ற ₹15 கோடி ஊதியத்தை வருமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்த
விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டது. இதன் காரணமாக, வருமான வரித்துறை விஜய்க்கு ₹1.5 கோடி
அபராதம் விதித்தது. இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இன்று இந்த வழக்கில் இன்று நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பு வழங்கினார்.
அதன்படி, கறுப்புப்பணம் பதுக்கிய வழக்கில் நடிகர் விஜய் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் செலுத்துமாறு நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவு
போட்டுள்ளது.
புலி திரைப்படத்தின் மூலம் கிடைத்த ரூ.15 கோடி வருமானத்தை தவெக
தலைவர் விஜய் மறைத்துள்ளார். விஜய் வருமானத்தை மறைத்த காரணத்தினால் தான் ரூ.1.5கோடி
அபராதம் விதித்துள்ளது வருமான வரித்துறை வருமானத்தை மறைத்த விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம்
விதித்ததில் எவ்வித விதிமீறலும் இல்லை – உயர்நீதிமன்றம்
வருமானத்தை மறைத்ததற்காக வருமான வரித்துறை விதித்த அபராதத்திற்கு
எதிரான தவெக தலைவர் விஜயின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்பேன் என விஜய் தொடர்ந்து பேசி வரும்
நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவு அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.
இதற்கு விஜய் ரசிகர்கள் எப்படி முட்டுக்கொடுக்கப் போகிறார்களோ..?

