News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னையில் இறந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டிக்குள் வைத்து கொடுத்த விவகாரம் தொடர்பாக பிணவறை உதவியாளரை பணியிடை நீக்கம் செய்ததோடு, லஞ்சம் கேட்கப்பட்டதாக சொல்லப்படுவது பொய் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கன்னிகாபுரத்தைச் சேர்ந்த மசூத், சவுமியா தம்பதிக்கு கடந்த 5ம் தேதி குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதைத்தொடர்ந்து மசூத், குழந்தையின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் ஒப்படைத்துள்ளார்.

 

இதைத்தொடர்ந்து நேற்று (டிச.10) குழந்தையின் உடலை அட்டை பெட்டியில் வைத்து, மருத்துவமனை நிர்வாகம் அடக்கம் செய்ய ஒப்படைத்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரூ.2,500 லஞ்சம் கேட்டதாகவும் கூறப்பட்டது. குழந்தையின் உடல் அட்டை பெட்டிக்குள் வைத்துக் கொடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

 

இது குறித்து தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் சங்குமணி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ‘‘குழந்தை இறந்தே பிறந்தநிலையில்தான் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. குழந்தையின் உடலை பன்னீர்செல்வம் என்னும் பிணவறை உதவியாளர் அட்டை பெட்டியில் வைத்து கொடுத்தது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறந்த உடலை ஒப்படைக்க கடைபிடிக்கப்படும் வழிமுறைகளை மீறியதால் பிணவறை உதவியாளர் பன்னீர்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்’’ என்று தெரிவித்தார்.

 

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சுகாதாரத்துறை அமைச்சர் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். அதோடு ரூ.2,500 லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் பொய் என்று தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் சங்குமணி உறுதியுடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link