News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான சற்று நேரத்திலேயே காங்கிரஸ் கட்சியின் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதன் பிறகும் ஜோதிமணி சூடு தாங்காமல் கொதித்துக்கொண்டு இருக்கிறார்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் வெளியானது. பொன்னேரி துரை சந்திரசேகர், சோளிங்கர் முனிரத்தினம், ஊத்தங்கரை குப்புசாமி, கிருஷ்ணகிரி செல்லகுமார், பென்னாகரம் தமிழ் குமரன், ஆத்தூர் அர்த்தனாரி ஈரோடு கிழக்கு கோபிநாத், ஊட்டி ராமச்சந்திரன், கவுண்டம்பாளையம் சூரிய பிரகாஷ், சிங்காநல்லூர் ஸ்ரீநிதி நாயுடு, துறையூர் லெனின் பிரசாத், கடலூர் சந்திரசேகரன், மயிலாடுதுறை ஜமால் யூனிஸ், அறந்தாங்கி ராமச்சந்திரன், காரைக்குடி மாங்குடி, உசிலம்பட்டி சரவணகுமார், சிவகாசி கணேசன் அசோகன், திருவாடனை ராம கருமாணிக்கம், ஸ்ரீவைகுண்டம் ஊர்வசி, சங்கரன்கோவில் சங்கை கணேசன், அம்பாசமுத்திரம் வி பி துரை, நாங்குநேரி ரூபி மனோகரன், குளச்சல், தாரகை, விளவங்கோடு டிடி பிரவீன், கிள்ளியூர் ராஜேஷ்குமார். இதில் மேலூர் மட்டும் இன்னமும் முடிவாகவில்லை.

இந்த நிலையில் ஜோதிமணி இன்று, ‘’காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 12 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கபட்டுள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் மீதமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் மனக்குமுறலையும், கொந்தளிப்பையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

 வேட்பாளர்கள் முன்பே முடிவுசெய்யப்பட்டு,அதற்கேற்ப தொகுதிகள் கேட்டு வாங்கப்பட்டுள்ளன. நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிற , தகுதியும்,மக்கள் செல்வாக்கும், வெற்றி வாய்ப்பும் உள்ள பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.

இருபது ஆண்டுகள்,முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பலர் இருக்கும்போது அந்த இடத்தில் கட்சிக்கு வந்து சில நாட்கள், சில வருடங்களே ஆன ,கள அனுபவம் இல்லாத சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது . தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான கொங்கு நாட்டில் செல்வாக்கு மிகுந்த ,38 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பானமை சமூகமாக உள்ள கொங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் அருந்ததியர் சமூகங்களுக்கு முழுக்கவும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் தேர்தல் வரலாற்றில் இதற்குமுன்பு நிகழ்ந்திராத ஒன்று. கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் உட்பிரிவுகளுக்கு இரண்டு தொகுதிகளை வழங்கியுள்ள காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மையான கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைப் புறக்கணித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதே போல 28 தொகுதிகளில் ஆறு தனித்தொகுதிகளைக் கேட்டுப்பெற்ற காங்கிரஸ் கட்சி ,மிகவும் பின் தங்கிய ,விளிம்புநிலை சமூகமான அருந்ததியர் சமூகத்திற்கு வாய்ப்பை மறுத்திருக்கிறது…’’ என்று காங்கிரஸ் கட்சியை ஒரு சாதிக் கட்சி ரீதியில் சித்தரித்திருக்கிறார்.

சிங்காநல்லூர் தொகுயில் காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீநிதி நிறுத்தப்பட்டதே ஜோதிமணியின் கொந்தளிப்புக்குக் காரணம் என்கிறார்கள். அவர் வளர்வது, ஜோதிமணியைப் பாதிக்கும் என்பதால் இந்த துடிப்பு. அதேபோல் பெண்ணாகரத்தில் போட்டியிடும் ஜி.கே.மணியின் புதல்வர் தமிழ்க் குமரன் கடந்த வாரம்தான் கட்சியில் சேர்ந்தார். அதற்குள் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் திமுகவுக்கு உரிய உள் இட ஒதுக்கீட்டில் சீட் வழங்கப்பட்டுள்ளதாகவே ஜோதிமணி குற்றம் சாட்டுகிறாராம்.

கட்சிக்கு விசுவாசமான நபர் என்றால், இதை கட்சித் தலைமையிடம் தெரிவிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் அல்ல என்கிறார்கள். இந்த தேர்தலில் ஜோதிமணி வேலை பார்க்காமல் புறக்கணிக்கப் போகிறாரா என்பதுதான் கேள்வி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link