News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் காங்கிரஸ் தலைவர்கள் உயிரோடு இருப்பதைக் காட்டும் வகையில் அடிதடி பஞ்சாயத்தில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் நேறைய தினம் மட்டும் இரண்டு ரகளை நடந்துள்ளது.

தமிழக காங்கிரசின் உட்கட்சி பூசலால் கட்சி அழிவுப்பாதையில் சென்று வருவதாக ஜோதிமணி எம்.பி வெளிப்படையாகவே ஆதங்கத்தை கொட்டி விட்டார். அதேபோன்று காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான சூர்ய பிரகாசம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது குறித்து சூர்ய பிரகாசம், ‘’தி.மு.க. வின் அடிமைகள் கூடாரமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை மாற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தீவிர முயற்சி செய்கிறார். தமிழக அரசின் கடன் சுமை 10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.  

வரும் தேர்தலில வெகுஜன தி.மு.க எதிர்ப்பினால் படு தோல்வி அடைய போகும் தி.மு.க வோடு சேர்ந்து காங்கிரசும் படுதோல்வி அடையாமல் இருக்கவும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழக வாக்காளர்களிடம் வீசும் விஜய் ஆதரவு பேரலையை மற்றும் பிரகாசாமான வெற்றி வாய்பை கருத்தில் கொண்டு, த.வெ.க வோடு தேர்தல் கூட்டணி அமைத்தால் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு கிடைக்கும் என்று தூண்டில் போட்டுவருகிறார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி துண்டு துண்டாக உடைகிறது. மாணித்தாகூர் தலைமையில் ஒரு அணி. ஜோதிமணி தலைமையில் ஒரு அணி. செல்வப் பெருந்தகை தலைமையில் ஒரு அணி. என பல்வேறு அணிகள் இருக்கிறது. திமுகவிற்கு ஜால்ரா போடும் அணி. தில்லிக்கு ஜால்ரா போடும் அணி. என்னை இரண்டு புள்ளிகளில் பிரிகிறது.

ஸ்டாலின் மீது மதிப்பும் நம்பிக்கையும் இருப்பதாக பேசிவரும் ராகுல் காந்தி இதுவரை விஜய் விவகாரம் குறித்தும் தமிழக தேர்தல் குறித்தும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

இப்படியே போனால், தமிழக தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விடும் என்பது உறுதி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link