Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-05-at-16.55.11_b6cd2742-1024x765.jpg)
ஈரோடு இடைத்தேர்தல் ஒருவழியாக முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் ஆளும் தி.மு.க.வினரும் அவரது கூட்டணிக் கட்சியினரும் எப்படிப்பட்ட கோழைகள், அட்டைக் கத்தி ராஜாக்கள் என்பது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. தி.மு.க.வின் தேர்தல் அராஜகத்தை எதிர்த்து வெற்றி பெற முடியாது என்பதால் ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் தொகுதியை தலை முழுகிவிட்டன. ஆனாலும், விடாப்பிடியாக எதிர்த்து நின்றவர் நாம் தமிழர் சீமான் மட்டும் தான். அதுவும், பெரியாரை எதிர்த்து நின்றார் என்றே சொல்ல வேண்டும்.
பெரியார் விவகாரத்தில் அத்தனை கட்சிகளும் வடிவேலு மாதிரி காமெடி செய்தன. நீ உண்மையிலே பெரியாரை எதிர்க்கிறாய் என்றால் அதை தைரியமாக பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் வந்து சொல்லு பார்ப்போம் என்று சவால் விட்டார்கள். சீமான் ஈரோட்டில் எல்லா கூட்டத்திலும் பெரியாரை எதிர்த்துப் பேசினார்.
இப்படி பொதுவாகப் பேசினால் சரியில்லை, பெரியாரை குறிப்பாக விமர்சனம் செய் பார்க்கலாம் என்றார்கள், பெரியாரை மோசமாகவே சீமான் விமர்சனம். இதற்கு சில உதிரிகள் ஆங்காங்கு போராட்டம் நடத்தினார்களே தவிர, யாரும் எதுவும் செய்ய முடியவில்லை. சீமான் தன்னந்தனியனாக தமிழ்த் தேசியம் என்பதில் உறுதியாக நிற்கிறார்.
திராவிடம் பேசும் நபர்கள் எல்லாம் வடிவேலு போன்று மாற்றி மாற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த தேர்தலில் சீமான் வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை, கடந்த தேர்தலில் வாங்கிய வாக்குகளைப் பெற்றாலே போதும், அவர் தான் வெற்றி வேட்பாளர். ஏனென்றால், இத்தனை அமைச்சர்களின் செல்வாக்கு, பணபலம் ஆகியவற்றை எதிர்த்து வாங்கும் வாக்குகளுக்கு பவர் அதிகம்.