காதலிக்க மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் முரட்டுத்தனமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே ஒரு தனியார் ஜெராக்ஸ் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அந்த பெண்ணுக்கு சித்திக்ராஜா என்ற வாலிபர் காதல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இளம்பெண் காதலிக்க மறுத்ததுடன் சித்திக்ராஜாவை எச்சரித்ததாக தெரியவந்துள்ளது.

 

இதனால் இளம்பெண் மீது சித்திக்ராஜா கடும் கோபத்தில் இருந்துள்ளார். இ¬த்தொடர்ந்து ஜெராக்ஸ் கடைக்குள் புகுந்த அவர், இளம்பெண் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் இளம்பெண்ணின் தலை, முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இளம்பெண்ணை தாக்கிய அவர், அங்கிருந்து உடனடியாக வெளியேறினார்.

 

இந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான நிலையில், இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைப்பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இளம்பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய சித்திக்ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

தஞ்சை அரசுப்பள்ளியில் 26 வயதான ஆசிரியை ரமணி என்பவரை மதன் என்ற இளைஞர் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவத்தின் வடு மறையாத நிலையில், மதுரையில் இளம்பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link