Share via:

இன்று (ஜனவரி 7) காலை நேபாள எல்லையையொட்டி ஏற்பட்ட நிலநடுக்கத்தை பொருட்படுத்தாது நடிகை மணிஷா கொய்ராலா செய்த துணிச்சலான விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில் நேபாள எல்லையொட்டி இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 7.1 ஆக பதிவானது. இந்நிலக்கத்தை தொடர்ந்து 6 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளைவிட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். முக்கியமான பொருட்களை கையில் ஏந்தியபடி, பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என அனைத்து மக்களும் சாலையிலேயே பதற்றத்துடன் உயிரை கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தனர்.
ஆனால் நடிகை மணிஷா கொய்ராலா வித்தியாசமாக இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தலையில் பேஸ்பால் விளையாட்டுக்கான தொப்பியை அணிந்தபடி, ட்ரெட்மில்லில் நடந்துகொண்டே, ஜிம் ஒர்க் அவுட் ஆடை அணிந்து செல்பி எடுத்து அதனை பகிர்ந்துள்ளார். மேலும் காலையில் நிலநடுக்கம் எங்களை உறக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டது என்று கேப்ஷனையும் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.