News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

வருகிற நவம்பர் மாதம் 5ம் தேதியன்று விராட் கோலியின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட பெங்கால் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா  இமாலய வெற்றி பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட்கோலியின் பிறந்தநாள் வருகிற நவம்பர் மாதம் 5ம் என்பது அவரது ரசிகர்களுக்கு தெரியும். அதே நாளில் இந்திய& தென் ஆப்பிரிக்கா இடையிலான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. 


இந்நிலையில் விராட் கோலியின் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பெங்கால் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாம். அதன்படி இந்திய& தென் ஆப்பிரிக்கா ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கிரிக்கெட் மைதானத்தில் வான வேடிக்கை நிகழ்ச்சிக்கும், கேக் வெட்டி கொண்டாடவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.


மேலும் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் அனைவருக்கும் விராட் கோலியின் புகைப்படத்துடன் கூடிய முகமூடியையும் வழங்க திட்டமிட்டுள்ளார்களாம். இந்த திட்டங்களுக்கு எல்லாம் ஐ.சி.சி.யின் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், அனுமதி மட்டும் கிடைக்கட்டும் பாருங்கள், விராட் கோலியின் பிறந்தநாளை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடி, அவரது வாழ்வில் சிறப்பான நாளாக மாற்றிவிடுவோம் என்கிறார்கள் பெங்கால் கிரிக்கெட் வாரியத்தினர். இந்த தகவலையடுத்து விராட் கோலியின் ரசிகர்கள் ஈடன் கார்டனில் அதிகளவில் கூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link