Share via:

விஜய் கட்சியான த.வெ.க. பொதுக்குழுக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகளுடன்
சேர்த்து 1710 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். நடிகர் விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர்
– ஷோபா வந்திருக்கிறார்கள். இன்றைய தினமும் விஜய்யின் மனைவி, பிள்ளைகள் வரவில்லை என்பதை
சீமான் கட்சியினர் எடுத்துப் போட்டு விளாசிவருகிறார்கள்.
தமிழ்நாட்டில் வெளியே வரவே எல்லோருக்கும் அச்சமாக இருக்கிறது என்று
பெண் நிர்வாகி பேசிய நிலையி,, நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து கட்சிக்கு புதிதாக வந்திருக்கும்
சி.டி.நிர்மல்குமார், ‘’எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதாக நினைத்துக்கொண்டு, கூண்டுக்கிளியாக
வீட்டுக்குள் இருந்துகொண்டு அரசியல் செய்யாதீர்கள்’ என்று பேசிய விவகாரம் கடும் சர்ச்சையாக
மாறியிருக்கிறது. விஜய் கட்சியில் இருந்துகொண்டே, விஜய் வீட்டுக்குள் இருந்து அரசியல்
செய்வதை கிண்டல் செய்திருக்கிறார் என்று விஜய் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் விஜய் கட்சியின் 17 தீர்மானங்கள் வெளியாகியுள்ளன.
1. வஃக்பு
சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம்.
2. இருமொழி
கொள்கையில் உறுதி.
3. பரந்தூரில்
புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது.
4. சமூக நீதியை
நிலைநிறுத்த, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
5. டாஸ்மாக்கின்
ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
6. மீனவர்
போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட
வேண்டும்.
7. நாடாளுமன்றத்
தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை.
8. பன்னாட்டு
அரங்கிற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுக.
9. கொள்கைத்
தலைவர்களின் வழியில் பயணிப்போம்.
10. மாநில அரசுகளுக்கு
அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
11. அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்.
12. சட்டம்
ஒழுங்கு சீர்கேட்டுக்குக் காரணமான தி.மு.க. அரசுக்குக் கண்டனம்.
13. பாலியல்
வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.
14. இலங்கைத்
தமிழர் பிரச்சினைக்குப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
15. தேர்தல்
கூட்டணி நிலைப்பாடு – தலைவர் விஜய்க்கே முழு அதிகாரம்.
16. புதிய நிர்வாகிகளுக்கு
வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
17. கட்சிகாக
உழைத்து மரணமடைந்த தொண்டர்களுக்கு இரங்கல்.