News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கிய நடிகை அந்த விழாவில் தனது திருமணத்திற்கு அணிந்திருந்த புடவையை அணிந்து கொண்டது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

நாட்டின் 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்ட பாலிவுட் நடிகை ஆலியா பட் தன்னுடைய திருமணத்தின் போது அணிந்த கொண்ட புடவையுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த புடவையின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

 

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆலியா பட் தனது அழகாலும், அவர் அணிந்திருந்த புடவையாலும் ஈர்த்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இது குறித்து ஆலியா பட் கூறும்போது, ‘‘ஸ்பெஷல் நாளுக்கு ஸ்பெஷல் அவுட்ஃபிட் கண்டிப்பாக தேவை. சில சமயங்களில், அந்த அவுட்ஃபிட் ஏற்கனவே உங்களிடம் இருக்கும். அந்த ஸ்பெஷல் உடையை ஸ்பெஷல் தருணத்திற்காக மீண்டும் மீண்டும் அணியலாம்’’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆலியாபட்டின் அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link