Share via:
சென்னை நந்தனத்தில் 47வது சென்னை புத்தக கண்காட்சி வருகிற ஜனவரி 1ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் புத்தகக்கண்காட்சிக்காக காத்திருக்கும் வாசகர்கள் ஏராளம். ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் அனைத்து வகையான புத்தகங்களை தேடி வாங்கி படிப்பதில் வாசகர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இருக்கும் ஆர்வம் ஒவ்வொரு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதை விற்பனை முடிவுகள் சொல்கின்றன.
அந்த வகையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற (2024) ஜனவரி மாதம் 4ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 47வது சென்னை புத்தகக்கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இந்த புத்தகக்கண்காட்சி வருகிற ஜனவரி 21ம் தேதி வரை என மொத்தம் 18 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இத்தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொள்கிறார்.
புத்தக்கண்காட்சி வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணிவரையில் நடைபெறும். அதேபோல் விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கு தொடங்கும் புத்தகக்கண்காட்சி இரவு 8.30 மணிவரையிலும் நடைபெறுகிறது. இந்த 18 நாட்களிலும் தொடர்ந்து மாலை நேரங்களில் சிந்தனை அரங்கில் பல தலைசிறந்த அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சொற்பொழிவாற்றுகிறார்கள்.