Share via:

பிரபல பாலிவுட் சீரியல் நடிகையான சப்னாசிங்கின் 14 வயது மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக சிறுவனின் 2 நண்பர்கள் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஹிந்தியில் வெளியான க்ரைம் பேட்ரோல் என்ற சீரியல் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர்தான் சப்னாசிங். இவருக்கு சாகர் கங்வார் என்ற 14 வயது மகன் இருந்த நிலையில் அவன் திடீரென்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் பரேலியில் சாகர்கங்வா தனது தாய் மாமன் ஓம்பிரகாஷூடன் தங்கியிருந்து பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் மாயமானதாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருந்த சாகர்கங்வா, வாய்க்காலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கையில் விஷம் அல்லது அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து மகனின் மர்மமரணம் குறித்து சரியான நீதி கேட்டு நடிகை சப்னாசிங் தனது உறவினர்களுடன் பரேலி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து அவர் போராட்டத்தை விட்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில் உயிரிழந்த சாகரின் நண்பர்களான அனுஷ் மற்றும் சன்னி ஆகியோரை போலீஸ் சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கூறும்போது, அனுஜூம், சன்னியும், சாகரும் சேர்ந்து போதைப் பொருள் உட்கொண்டதோடு, மது அருந்தியதாக தெரிகிறது. அளவுக்கு அதிகமாக உட்கொண்ட சாகர் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதனால் பயந்துபோன 2 நண்பர்களும் அவனது உடலை வயல்வெளிக்கு இழுத்துச் சென்றதாக அந்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.