Share via:
முதன்முதலாக தேர்தல் களத்துக்கு வந்து கடலூர் தொகுதியில் தோற்றுப்போனவர்
இயக்குனரும் நடிகருமான திடீர் வேட்பாளர் தங்கர் பச்சான். அவர் தொகுதி மக்களுக்கு நன்றி
தெரிவிக்கிறேன் என்ற பெயரில் வேனில் நின்றபடி வாக்காளர்களைத் திட்டித் தீர்த்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணியில்
இருந்த பாமக சார்பில் களமிறக்கப்பட்டவர் இயக்குநர் தங்கர்பச்சான். தேர்தல் பிரச்சாரத்தின்
போது, தான் ஜெயிக்கப் போவது உறுதி என்று பேசி வந்த அவர், தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.
காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் வெற்றி அடைந்த நேரத்தில் தங்கர்பச்சானுக்கு 2 லட்சம்
ஓட்டுகளே விழுந்து டெபாசிட்டை பறிகொடுத்தார்.
இந்த நிலையில் மக்களுக்கு நன்றி சொல்கிறேன் என்று வேனில் நின்றபடி
பேசத் தொடங்கினார். அவர் பேசியதை யாரும் நின்று கேட்கவே இல்லை. இதனால் கடுப்பான தங்கர்
பச்சான், ‘இந்த கடலூர் மாவட்டத்துல பிறந்ததை அவமானமா நினைக்கிறேன். உங்களுக்கு எல்லாம்
எதுக்கு ஓட்டு? போராட்ட குணம் இல்லாத உங்களுக்கு எதுக்கு வாக்கு?’ என்றெல்லாம் கொந்தளித்தார்.
அதோடு நில்லாமல், ‘இந்த தேர்தலில் சரியான ஆட்களை தான் நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோமோ
என்று உங்களை நீங்களே கேள்வி கேட்க வேண்டும். அதற்கான வாய்ப்பு இது. காலையில் வழக்கமாக
உடற்பயிற்சி செய்வதற்காக சாலையில் நடந்து போவேன். அப்படி கடந்த சில தினங்களாக நான்
போன போது, என்னை பார்க்கும் முன்பின் தெரியாத மக்கள் கூட என்னிடம் வந்து, எதுக்கு சார்
உங்களுக்கு அரசியல் என்று கேட்கிறார்கள்.
நீங்க எப்பேற்பட்ட இயக்குநர்.. நீங்கள் போய் இந்த மக்களுக்காக
அரசியலுக்கு வரலாமா.. அரசியல் சாக்கடை சார் என்று சொல்கின்றநான் அவர்களிடம் கூறினேன்.
அரசியல் சாக்கடை தான். ஆனால் அதை சுத்தம் செய்தால் தான் ஊர் சுத்தமாக இருக்கும். அந்த
சாக்கடையை சுத்தம் செய்ய நீங்களும் வர மாட்டீர்கள். உங்கள் பிள்ளைகளையும் அனுப்ப மாட்டீர்கள்.
அப்படியென்றால் யார் தான் அதை சுத்தம் செய்வது என்று கேட்டேன். வெற்றி தோல்வி எல்லாம்
இங்கே பார்த்தால் முடியாது.
பெருந்தலைவர் காமராஜரையும், பேரறிஞர் அண்ணாவையும் தோற்கடித்த மக்கள்
தானே இவர்கள். அன்றைக்கு அந்த தலைவர்களை தோற்கடித்தார்கள். ஆனால் இன்று வரை அதற்காக
மக்கள் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கஇப்போது மீண்டும் அந்த நிலைமை உங்களுக்கு வந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் 40-க்கு 40 திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்திருக்கிறீர்கள்
இல்லையா.. நீங்களும் கட்டாயம் வருத்தப்பட போகிறீர்கள்.
இன்னும் ஒரு மாசம் கழிச்சு பாருங்க. அப்போது உங்களுக்கு தெரியும்.
கடந்த முறை நீங்கள் 39 திமுக கூட்டணி வேட்பாளர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினீங்க.
அவங்க என்ன கிழிச்சாங்க. ஒன்னும் கிழிக்கல. இப்போது மறுபடியும் அந்த 40 பேரை தேர்ந்தெடுத்து
இருக்கீங்க. தமிழ்நாட்டை இவங்க எங்கே கொண்டு போய் விடுவாங்கனு பாருங்க. இனி என்ன நடக்க
போகுதுனு பாருங்க..’’ என்று சாபம் கொடுத்தார்.
இப்படி புலம்ப வைச்சிட்டாங்களே.