Share via:
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பக்கமே பா.ம.க. இருக்கும் என்று
எண்ணப்பட்டு வந்த நிலையில், பா.ஜ.க. பக்கம் சாய்ந்துவிட்டது. இந்த கூட்டணியில் அமைச்சராகும்
ஆசையில் அன்புமணி இருக்கையில், வில்லங்கமாகப் பேசியிருக்கிறார் வேட்பாளரும் சினிமா
பிரபலமுமான தங்கர்பச்சான்
மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள்
கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் அக்கட்சி அங்கு போட்டியிடும்
9 வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி,
திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா
அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு
ஆரணி – முனைவர் அ.கணேஷ் குமார்
கடலூர் – தங்கர் பச்சான்
மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார்
தருமபுரி – அரசாங்கம்
சேலம் – ந. அண்ணாதுரை
விழுப்புரம் – முரளி சங்கர்
இந்த தேர்தலில் அன்புமணி போட்டியில்லை: கடந்த
2019 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு 70 வாக்குகள் வித்தியாசத்தில்
திமுக வேட்பாளர் செந்தில்குமாரிடம் தோற்றுப் போனார். ஆகவே, பா.ஜ.க.வில் அடுத்து ராஜ்யசபா
உறுப்பினர் பதவியின் மூலம் அமைச்சராகும் ஆசையில் இருக்கிறார்.
இந்த நிலையில் கடலூர் தொகுதி வேட்பாளரும் சினிமா கலைஞருமான தங்கர்
பச்சசன், ‘பா.ஜ.க.வுடன் பா.ம.க.வின் கூட்டணி தேர்தலுக்காக உருவானது. ஆகவே, 19ம் தேதியுடன்
இது முடிந்துபோகும்’ என்று தெரிவித்திருக்கிறார்.
கூட்டணி கையெழுத்து மை காய்வதற்குள்ளாகவே முறிவுக்கும் தேதி குறிச்சிட்டாரு
தங்கரு.