Share via:
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள நாட்டுக்கு பத்து நாட்களுக்குப்
பிறகு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன.
இந்த பேரிடரை நேரில் பார்த்து தேசியப் பேரிடராக அறிவித்து நிதி வழங்கவேண்டும் என்ற
கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன்காரணமாக
முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட
பகுதிகளில் 11-வது நாளாக நேற்று மீட்புப் பணி நடைபெற்றது. இதுவரை 427 பேர் உயிரிழந்துள்ளனர்.
273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை.
இந்த சூழலில் கேரளா வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர்
பினராயி விஜயன் நேரில் சந்தித்து வரவேற்பு கொடுத்தார். இதையடுத்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து
பேச உள்ளார். நிலச்சரிவில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்து
ஆறுதல் கூறி உள்ளார்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம்
நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வயநாடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்பு
பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள
முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேசியப் பேரிடர் நிதி வழங்கப்பட வேண்டும் என்று
இப்போதே கோரிக்கை வைத்திருக்கிறார். எனவே, நிச்சயம் நிதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
எவ்வளவு என்பது தான் குழப்பத்தில் இருக்கிறது.
அள்ளிக் கொடுக்கட்டும் பிரதமர்.